என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Minister visited"

    • மழை பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
    • மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி தடுப்புச்சுவர் சேதம், ஓம்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகியவற்றை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தங்களை கவனமுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும் என கூறினார். இந்த மழைபாதிப்புகள் குறித்த ஆய்வின் போது கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கோத்தகிரி அரசு பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணி நடைபெற்றதையும் அவர் பார்வையிட்டார். 

    ×