என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "the old woman"
- பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
- பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.
100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையம் அருகே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
- தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு ரேசன் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த குப்பம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்திருந்தார்.
அப்போது அவருக்கு பரிசு பொருட்கள் மட்டும் கொடுத்து பணம் வழங்க வில்லை என அந்த மூதாட்டி புகார் கூறினார்.
இது பற்றி அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி யின் கணவர் விஸ்வநாதனிடம் அந்த மூதாட்டி கூறினார். இதையடுத்து அவர் ரேசன் கடைக்கு வந்து இது குறித்து விசாரித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து கடை ஊழியர்கள் அங்கு பணத்தை சரி பார்தனர். இதில் பணம் சரியாக இருந்தது. மற்ற குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி பணம் தவற விட்டதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
இதை கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியின் மனிதநேய செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கங்காதேவி சம்பவத்தன்று காலை அத்தாணி-பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் நீண்ட மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் அத்தாணி-பவானி பகுதியில் தேடிச்சென்று பார்த்தனர். அப்போது கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.
ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற கங்காதேவி தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப் பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பக்கூடல் போலீசார் கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
- அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்