என் மலர்
நீங்கள் தேடியது "The price raice of flowers"
- நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது.
- அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
கடந்த காலங்களில் ஒரு பை ரூ.10 க்கு விற்பனையான அரளி அதிகபட்ச விலையாக ரூ.450 முதல் 500 வரை விற்பனையானது. அதேபோல் செண்டுமல்லி ரூ. 100 க்கும், கோழிக்கொண்டை ரூ. 80 க்கும், செவ்வந்தி ரூ. 150 க்கும், வாடாமல்லி ரூ. 60 க்கும், துளசி ரூ. 60 க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 150க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்பனையாகின.
கடந்த காலங்களில் அரளி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூக்கள் விற்பனை மற்றும் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.