என் மலர்
நீங்கள் தேடியது "The retaining wall"
- தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை
- பெண் ஒருவர் நடந்து சென்றார்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் கூடலூர் அத்திப்பள்ளி சாலையில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அந்தப் பெண் நடந்து சென்ற ஒரு சில மணி நொடியில் ஆற்றின் தடுப்பு சுவர் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்தார். தொடர்ந்து லேசான காற்றுடன் கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின்கீழ் நிறுத்த கூடாது என தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.