என் மலர்
நீங்கள் தேடியது "The trivia"
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது.
- இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.
ஈரோடு:
ஊஞ்சலூர் அரசு பள்ளியில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.
ஆண்களுக்கான போட்டிகளை கொடுமுடி ஒன்றிய தி.மு.க செயலாளர் சின்னசாமி தொடங்கி வைத்தார்.
இதில் ஆண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோருக்கு பிரிவில் 12 அணிகளும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 13 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றன.
தொடர்ந்து இன்று மாணவிகள் பங்கேற்கும் பெண்களுக்கான கபாடி போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும்,
17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.