search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the well"

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது
    • 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு, தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். தொழி லாளியான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் நாயை தேடிப் பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகே இருந்த தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கிணற்று அருகே சென்று பார்த்தார். சுமார் 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை யடுத்து நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி நாயை பத்தி ரமாக மீட்டனர்.

    • கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
    • அப்போது மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி தோப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வரு கிறார். இவரது தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது.

    அதில் 40 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. மேலும் அவரது தோட்ட த்தில் பசு மாடுகள், எருமை கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி முழு வதும் ஈரமாக காணப்பட்டது.

    அப்போது அந்த பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வ ராஜ் உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி எருமை கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    ×