search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theatres"

    • அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர்.

    சென்னையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால், திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த நிலையில் காவல்துறை போலீஸ் பாதுகாப்பு போட்பபட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கம், சத்யம் சினிமாஸ் திரையரங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹானின் ஈசிஆர் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
    • மேளதாளம் முழங்க கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.



    காளவாசலில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கோஷமிட்டபடி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.

    மதுரை

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய 2 திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரை யரங்குகளில் இன்று அதி காலை ரிலீஸ் செய்யப்பட்டது.

    மதுரையில் 19 தியேட்டர் களில் துணிவு திரைப் படமும்,14 தியேட்டர்களில் வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் துணிவு சிறப்பு காட்சிகள் தொடங்கின.முதல் காட்சியை காண தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் கூட்டம் களை கட்டியது.பட்டாசு வெடித்து கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளம் முழங்க ரசகர்கள் ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அதிகாலையில் விஜய் ரசிகர்களும் திரளாக பங்கேற்று தியேட்டர்களில் குவிந்தனர்.பின்னர் பட்டாசு களை வெடித்து மேள தாளம் முழங்க ரசிகர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    ரசிகர்களின் இந்த வெற்றி கொண்டாட்டத்தால் மதுரை தியேட்டர்களில் ரசிகர் களின் ஆரவாரங்களால் விசில் சத்தம் பறந்தது. ஒரே தியேட்டர்களில் அஜித்- விஜய் படங்கள் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களின் மோதலை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை வரை இந்த 2 திரைப்படங் களுக்கும் சிறப்பு காட்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது .துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஆயிரம் ரூபாயை தாண்டி டிக்கெட்டுகள் ரசிகர் களுக்கும் பொது மக்களுக்கும் கொடுக்கப்படு வதாக தெரிய வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட தியேட்டர்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதுதவிர ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் இருந்து உள்ளது.இதனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை பொதுமக்கள் பொங்கலுக்கு வழக்கமான கட்டணத்தில் திரையில் பார்ப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டன. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இன்று துணிவும், வாரிசும் திரைக்கு வந்து உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி யுடனும், ஆரவாரத்துடனும் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

    தீபாவளி பண்டிகை நாள் மட்டுமன்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. #TNGovt #Theatres
    சென்னை:

    தீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதல் சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

    அந்த அரசாணையில், தீபாவளி மட்டுமின்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதலாக  ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #TNGovt #Theatres
    திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உணவுப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #TheatresFoodRate
    சென்னை:

    திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொண்டதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 72 கேண்டீன் உரிமையாளர்கள் மீதும், 38 தியேட்டர்கள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோல், சாலையோர கடைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. #TheatresFoodRate
    ×