என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "theft arrest"
- தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்னை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தருமபுரியில் உள்ள மென்ஸ் வேர் என்னும் ரெடிமேட் கடையில் கடந்த 16-ம் தேதி அந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணி வகைகளை நூதனமான முறையில் திருடி சென்று தப்பியோடி விட்டனர். இதுகுறித்து கடையில் உரிமையாளர் தருமபுரி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததில் தொடர்ந்து தருமபுரி நகர போலீசார் அந்தக் கடையிலும், அப்பகுதியிலும் பதிவாகியிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தருமபுரி நகரில் சுற்றித்திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது
விசாரணையில் இருவரும் சுமதி, சுஜாதா, என்பதும், அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பெண்கள் இருவரும் வேறு எங்காவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என பல கோணத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்துள்ள வணிக நிறுவனங்களில், இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சாதாரண நாட்களிலும் தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
- போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
தேவதானப்பட்டி:
மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
திருவோணம்:
திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தை சேர்ந்த உத்தமநாதன் மகன் ராஜா (வயது 35). இவர் 4 மாதத்துக்கு முன்பு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதனை அவர் ஊரணிபுரம் கடை வீதியில் நிறுத்தி இருந்தபோது மர்ம நபர் திருடி சென்று விட்டான்.
இதுபற்றி அவர் ஊரணிபுரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஊரணிபுரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் சந்தேகத்துக்கிடமான நிலையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தததில் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு போன ராஜாவின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் அவர் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும், வீடுகளுக்கு வேலைக்கு சென்று நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்ததாகவும் கூறினார்.
விசாரணையில் அவர் பட்டுகோட்டை லட்சதோப்பு பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் மணிவண்ணன் (22) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி குளிக்கரை சேகர் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் தர்மபுரியில் ஒரு திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த பிரம்மமூர்த்தி (27), நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 25) ஆகிய இருவரும் விசாரணையின்போது குளிக்கரை சேகர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் கொரடாச்சேரி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் குளிக்கரை சேகர் வீட்டில் திருடிய கார் மற்றும் நகைகளையும், திருவாரூர் ஒன்றியம் கீழப்படுகையில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் திருடிய 8 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பாத்திரங்களையும் இருவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு பொருட்களை மீட்ட திருவாரூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப் -இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், கொரடாச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் தைமை காவலர் ரவிக்குமார் ஆகியோரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் விக்ரமன் பாராட்டினார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு உள்ள தனியார் போல்வெல் லாரி நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஏம்ஸ்சந்த் வேலைபார்த்து வருகிறார். இவர் ஊருக்கு செல்வதற்காக தனது சம்பள பணத்தை ரூ. 40 ஆயிரத்தை வாங்கி கொண்டு அங்குள்ள தினசரி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு ஓடினர். அவர் சத்தம் போடவே பொதுமக்கள் அவரை விரட்டினர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்செங்கோடு மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மற்ற 2 வாலிபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் கடற்கரை சாலையில் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் பக்கிரிசாமி நின்றார். அவர் தனது செல்போனை லாரியில் சார்ஜரில் போட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களில் ஒருவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரிந்தது. அவனை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்