என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft Attempted"

    • அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.
    • 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி மற்றும் 2 வெள்ளி கிரீடம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த அதே நாளில் அருகில் உள்ள கிராமமான கீழகொம்பகுளத்தில் உள்ள மற்றொரு அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

    கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சி களை கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது மர்மநபர், கடப்பாரையுடன் கோவிலில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும், கதவை உடைக்க முடியாததால் அந்த நபர் திரும்பி செல்வதும் காமிராவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ காட்சிகள், சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே காமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் கீழகுளம் கிராமத்தில் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×