search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft of"

    • சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.
    • அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் அந்த பகுதியில் உரக் கடை வைத்து நடத்தி வரு கிறார். இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் வங்கி பாஸ் புக், செக் புக் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சுந்தரமூர்த்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடு பட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.
    • குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடைய கம்பெனியின் தலைமை அலுவலகம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.

    இந்த கம்பெனியின் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் என்பவர் கடந்த மாதம் 30-ந் தேதி குடோனை திறந்து பார்த்த போது குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    கடந்த 25-ந் தேதி குடோனில் சரக்குகளை கையாளும் பொழுது துணி பேல்கள் சரியாக இருந்து ள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாரோ மர்ம நபர்கள் சாவி போட்டு குடோனை திறந்து துணி பேல்களை திருடி இருக்கலாம் என தெரியவந்தது.

    இது தொடர்பாக சுரேஷ்குமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×