என் மலர்
நீங்கள் தேடியது "Thenthiruperai"
- தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது
- குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட நேரங்களில் குடிநீர் வருவதால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 -வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் குட்டி தோட்டத்தில்10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரமேசு பாபு, துணைத் தலைவர் அமுதவல்லி துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கூறுகையில், உள்ளாட்சி அமைப்பின் முக்கிய பணி என்பது பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதாகும். இதில் எந்த விதமான பாரபட்சமும் தாமதமும் இருக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்படி தென்திருப்பேரை பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், கீதா, குமரேசன், மாரியம்மாள், சீதா லட்சுமி, சண்முகசுந்தரம், காசி லட்சுமி, துரைராஜ், கல்லாம்பாறை தி.மு.க. வார்டு செயலாளர் ராஜேந்திரன், குட்டிதோட்டம் முத்துகிருஷ்ணன், கீர்த்தி, பெருமாள், ராஜகோபால், பாலகிருஷ்ணன் வெங்கடேசன், சுரேஷ் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது.
- வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் எல்லை பறவை சுதன் தலைமையில் தென்திருப்பேரையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் கேசவன் (கிழக்கு), ஆழ்வை செல்வகுமார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி செய லாளர் தேன்மான்குளம் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை பெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாய தொழிலை பாதுகாத்திடும் வகையிலும், எளிய விவசாயிகளின் நலன் காத்திடும் வகையிலும் வேளாண்மை துறை அதிகாரிகள் செயல்பட வலியுறுத்துகிறது. கடம்பாகுளம் மற்றும் தென்கரை குளங்களின் கரைகளை பலப்படுத்தி மடைகளை மராமத்து செய்து பாதுகாத்திட பொதுப்பணித்துறையை வலியுறுத்துகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு முதல் கொற்கை வரை ஜீவநதியான தாமிரபரணி நதியை இயற்கை வளப்பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் புளியங்குளம் பரியன், சேகர், ஸ்ரீீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமராஜன், ஆழ்வை பேரூர் கழக செயலாளர் பிரபாகரன், ஆத்தூர் மாரீஸ் மள்ளர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இராஜபதி ஜெயராமன், குருகாட்டூர் கிளை செயலாளர் ஞானபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்திருப்பேரை நகர செயலாளர் துர்க்கை யாண்டி நன்றி கூறினார்.
- குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி உள்பட பா.ஜ.க வினர் பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ரேவதிசெல்வகிருஷ்ணன், மண்டல் பொதுசெயலாளர் முருகன் என்ற பரமசிவன், துணைத்தலைவர்கள் ராஜாராம், கோவிந்தராஜன், செயலாளர் கண்மணி, பொருளாதார பிரிவு செயலாளர் ராமையா, விவசாய அணி செயலாளர் கணேசமூர்த்தி, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரச்சார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், இளைஞரணி பொது செயலாளர் பாலமுருகன், பிரச்சார பிரிவு செயலாளர் முருகபெருமாள், ஓ.பி.சி அணி தலைவர் பட்டுராஜ், மகளிரணி தலைவர் காமினி, கிளை தலைவர்கள் ராஜகோபால், முத்துலிங்கம், முத்து சஷ்டிகுமார், ஓன்றிய செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடசுப்பிரமணியன், செந்தூர்செல்வன், செல்வி, சந்தியா, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கங்கா துரை, அரசு தொடர்புத்துறை செயலாளர்கள் கெருடப்பன், கார்த்திக் மற்றும் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது.
- தி.மு.க. சார்பில்வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தென்திருப்பேரை:
தமிழக அரசின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது. பேரூர் பகுதியில் 100 சதவீதம் முழுமையடையச் செய்ய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்ச்சி ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் நகர செயலாளர் முத்து வீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், சீதாலெட்சுமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மீட்கப்பட்ட நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரையிலுள்ள நவ கைலாயத்தில் 7-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.25 ஏக்கர் நஞ்சை நிலம் குருகாட்டூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.
அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அந்த நிலத்தை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், அறநிலையத்துறை தனி தாசில்தார் ஈஸ்வர நாதன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டு நிலத்தை மீட்டனர்.
அந்த நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.
- தென்திருப்பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
- தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.
தென்திருப்பேரை:
ஆன்மீக சிறப்பு வாய்ந்த தென்திருப் ேபரையில் நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோவி லும், நவகைலாயங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது. தென்திருப் பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படை யில் வீடு தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தென்திருப்பேரை யில் நேற்று ஒட்டுமொத்த மெகா தூய்மை பணி நடைபெற்றது. தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் ஆகிய 3 பேரூராட்சி அலுவல கங்களில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென் திருப்பேரை தூய்மை பணி யாளர்களுடன் இணைந்து மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், கொடி, மாரியம்மாள், இளநிலை அலுவலர் சேக் அகமது மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மை பணியில் பொதுமக்களிடம் குப்பை இல்லா நகரை உருவாக்கி சுகாதாரத்தை பேணிக் காப்போம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- விசாக நட்சத்திரம் 10 நாட்கள் மாசி திருவிழாவாக கொண்டாடப்படும்.
- ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.
தென்திருப்பேரை:
நவதிருப்பதி கோவில் தலங்களில் 9 -வது ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் பிறந்த திவ்யதேசம், நம்மாழ்வார் விக்ரகம், பொருணை நதி நீரை காய்ச்சி வடித்த நாள் மாசி விசாகமாகும். இந்த ஆண்டு மாசி மாதம் 2 விசாக நட்சத்திரம் வருகிறது.
இந்த விசாக நட்சத்திரம் 10 நாட்கள் முந்தி மாசி திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக 2 விசாக நட்சத்திரம் வருவதால் நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு 8.30 மணிக்கு நம்மாழ்வார் ஆதிநாதர் சன்னதி எழுந்தருளினார். பின்னர் 9 மணிக்கு திருவாராதனம். நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி. தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருவிழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
- 24-ந் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
தென்திருப்பேரை:
நவதிருப்பதிகளில் 2-வது ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, இந்தாண்டிற் கான திரு விழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
திருவிழா கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது. காலை 10.30மணிக்கு கொடி பட்டம் கோயில் வளாகத்தை சுற்றிவரப்பட்டு காலை 11,05மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், கொடியேற்றி வைத்தார்.
கொடியேற்றத்தினை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 9.10மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது.
இதைப்போல் தினமும் மாலை 6 மணிக்கு பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ஹ வாகனம், ஹனுமந்தம், சேஷம், யானை, இந்திர விமானம், சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, குதிரை, வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
திருவிழாவின் 5ம் திருவிழாவான 18ம் தேதி மாலை 6மணிக்கு எம்இடர் கடிவான் பெருமாள் கருட சேவையும், 8ம் திருவிழாவான 20ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5மணிக்குள் திருக்கல்யாணமும், 24ம் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். அர்ச்சகர்கள் ராஜ கோபாலன், சுந்தர்ராஜன், ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், உள்ப்பட பலர் கலந்து கொண்டனர்
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.
- 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.
நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார்.
5-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கருடசேவை நிகழ்ச்சியும், 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி (சனிக்கிழமை) இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) மாசி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத படித்துறைகள் கட்ட வேண்டும்.
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக போடப்படாத குண்டும் குழியுமான சாலைகள், புதுப்பிக்கப்படாத படித்துறைகள் மற்றும் புதிய படித்துறைகள் கட்ட வேண்டும். கடந்த 20 வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.
- மாசி திருவிழா கடந்த 1-ந்தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் குருவுக்கு அதிபதியானதும், சுவாமி நம்மாழ்வார் அவதரித்த தலமும் ஆகும். இங்கு நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் கிடைத்த நன்னாளை போற்றும் வகையில் ஆண்டு தோறும் மாசி தெப்பதிருவிழா கொண்டாடப்படுகிறது.
கொடியேற்றம்
மாசி திருவிழா கடந்த 1-ந்தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி யது. அதைத்தொடர்ந்து 13 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.
இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமி நம்மாழ்வார் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 9 மணி அளவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஆச்சாரிய குருக்கள் சீனிவாசா சேவைகள் அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து கோவிந்தா கோபாலா, கோவிந்தா கோபாலா என கரகோஷத்துடன் 4 ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது.
தெப்ப உற்சவம்
நாளை 10-ந்தேதி இரவில் நடைபெறும் தெப்ப உற்சவத்தில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந்தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 12-ந்தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் ரங்கராஜன், பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி, தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், முன்னாள் நகர செயலாளரும், வடகால் விவசாய சங்க தலைவருமான முத்துராமலிங்கம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், ராஜப்பா வெங்கடாச்சாரி, மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
- கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
- இரவு 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.
தென்திருப்பேரை:
தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6-வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல், 8.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடந்தது. 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து தீபாரா தனை நடைபெற்றது.
நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத் சுவாமிகள் அண்ணா வியார் பாலாஜி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம் பிச்சைமணி சுந்தர நாராயணன் ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 29, 30-ந்தேதி புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் செய்கின்றனர்.