search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They attacked each other"

    • நண்பர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற நாகரத்தினம் (வயது 40). அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பகவான்(37) இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பகவான் சேட்டை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சேட்டு பீர்பாட்டிலை உடைத்து பகவான் வயிற்றில் குத்தி உள்ளார்.

    இதில் நிலைகுலைந்து ரத்தம் கொட்டிய நிலையில் பகவான் கீழே விழுந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பகவானை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலத்தில் இருந்து வட விரிஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ் டிரைவர் கொசவன் புதூரை சேர்ந்த முரளி (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.

    விரிஞ்சிபுரம் வேளாண்மை பல்கலைக்கழகம் அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியில் பஸ் சென்றது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளிப்போய் பஸ் நின்றது. இதனால் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சக்திவேல்( 19) டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரத்த காயம் அடைந்த டிரைவர் முரளி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக டிரைவர் முரளி கொடுத்த புகாரின்பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×