என் மலர்
நீங்கள் தேடியது "Thimpham on the mountain"
- 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.
- இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி-சத்தியமங்கலம் இடையே திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் மைசூரிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக காரில் மைசூரை சேர்ந்த முகமது கபில் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. சுதாரித்து கொண்ட முகமது கபில் மற்றும் குடும்பத்தினர் காரை விட்டு கீழே இறங்கி தப்பினர்.
உடனே ஆசனூர் தீயணைப்பு துறையினருப்ழு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடம் வந்து தண்ணீரை பீச்சியடித்து காரில் எற்பட்ட தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து விட்டது.
நல்ல வேளையாக காரை விட்டு முகமது கபில் அவரது குடும்பத்தினர் இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.