என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirumal Poojai"
- குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.
- இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய் கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரம், விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து விநாயகர், நாராயணர், அம்மன்கள், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதியம் நடைபெற்ற பூஜையின் போது முத்துமாலை அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும், நேர்த்தி கடன் செலுத்தியும் முத்துமாலை அம்மனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோ ருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த முத்துமாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், செல்வராஜ், கேசவமூர்த்தி, முத்துலிங்கம், பிரகாஷ்,ஈஸ்வரன், ஜெயசங்கர், முத்துகுமார், பெரியசாமி, கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன், பாலகிருஷ்ணன், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் எராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.