என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thiruparankundram constituency"
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.
காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 6-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் அவர் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் 2-வது கட்ட மாக பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து வடபழஞ்சி தனக்கன்குளம், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். #TNByPolls
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸின் வெற்றியை ரத்து செய்துள்ளார்.
ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக்கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே, தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Jayalalithaa #fingerprints
ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.
அப்போது வக்கீல் அருண் ஆஜராகி திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து என் கட்சிக்காரரான தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தீர்கள். இந்த நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கை காரணம் கூறி, ஐகோர்ட் மீது பொறுப்பினை சுமத்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி, தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே போஸ் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்து விட்டார். அதனால் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதும், அதற்கு விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #ThiruparankundramElection #MadrasHC
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக் குட்பட்ட தனக்கன்குளம், நிலையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் அம்மா திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற நல உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் நட ராஜன் தலைமை தாங் கினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள், அதிகாரிகளை தேடி சென்ற நிலை மாறி, அதிகாரிகளே மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்கள்.
இது அம்மா ஏற்படுத்தி தந்த அரசு. அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரது வழிகாட்டுதலோடு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்குமே அ.தி.மு.க.வின் கோட்டையாகும். 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீனிவேல், 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மீண்டும் ஒரு இடைத் தேர்தலை சந்திக்க இருக் கிறோம். இதில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறுவதற்கு உறுதியாகி விட்டது. ஏனென்றால், கடந்த இடைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவதுதான் அ.தி.மு.க. அரசின் முக்கிய நோக்கம். அம்மாவின் பிள்ளைகளாகிய எங்களால்தான் அது முடியும்.
சிலர் வருவார்கள், வாய் சவடால் பேசுவார்கள், சுயேச்சையால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார்கள். இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழக மக்களுக்கு சேவை செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுகின்ற வகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல், தமிழரசன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, முத்து இருளாண்டி, திருநகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயநலகூடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமைதாங்கி குத்துவிளக்கேற்றி சமுதாய வளைகாப்பை தொடங்கி வைத்து 120 பெண்களுக்கு சேலை,பூ,மஞ்சள் கயி,பழம் வளையல், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களைவழங்கினார்.
கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டி மடைசண்முகம் ,திட்ட அலுவலர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி வரவேற்று பேசினார். பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது :-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி கொள்வது அவர்களின் கடமை.
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டை எனவே அங்கு அ.தி.மு.க வேட்பாளர் யார் போட்டியிட்டாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அந்த வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்பிப்போம். தி.மு.க ஆட்சியில் என்னென்ன குறைபாடுகள் , குற்றச்சாட்டுகள் இருந்ததோ அதை எல்லாம் இன்றைக்கு எங்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள்.
தி.மு.க.வினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரம் கிடையாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு எங்கள் மீது ஒவ்வொரு அம்பாக எய்து பார்க்கிறார்.அம்புகள் எதுவும் எங்களைதாக்க முடியாது. அது மீண்டும் தி.மு.க . வினரையே தாக்கும் .
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியினபோது கிணத்துக் கடவு பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி, மாவட்டமகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள தேவராஜ் , தாமரை ஈஸ்வரன், சண்முகம் , பிரபு, தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். #pollachijayaraman
புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
மதுரை:
முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சிலைமான், எஸ். புளியங்குளம், விரகனூர், ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. விற்கு என்று ஒரு தனி வரலாறு உள்ளது 2017-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் அம்மாவின் ஆசியுடன் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 43ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா மக்கள் அளப்பரியாண பற்றும் பாசமும் வைத்துள்ளனர்.
இதனை எண்ணிப் பாராமல் தி.மு.க.வும் தினகரனும், சில எதிர்க் கட்சிகளும் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று ஊடகங்கள் வாயிலாக சவால் விட்டு வருகின்றனர். அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கூறுகிறேன்.
நாங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம், தோப்பூரில் 10 ஆயிரம் வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் பஸ்போர்ட்டை திருப்பரங்குன்றம் தொகுதியில் உருவாக்க உள்ளோம். இது மட்டுமல்லாது ரூ.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார் என்று மக்களிடத்தில் நாங்கள் எடுத்துரைத்து வெற்றி பெறுவோம்.
ஆர்.கே.நகருக்கே செல்ல முடியாமல் வார்த்தை ஜாலமிடும் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவர் எந்த சாதனையை சொல்லி மக்களிடத்தில் வாக்கு கேட்பார். ஒரு சாதனையும் செய்யாத எதிர்கட்சிகளெல்லாம் வெற்றி பெறுவோம் என்று கூறி வருவது மாயை ஆகும். மக்களும் இதை ஒரு போதும் நம்ப மாட்டார்கள் .
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட பொருளாளர் அம்பலம், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தலைமை தாங்கினர். ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பூமிபாலகன், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் பாரி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thiruparankundramconstituency
மதுரை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிதி உதவி வழங்கி வருகிறார்.
அதன்படி திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற 170 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிதி உதவி வழங்கினார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என 170 குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார். நிதி உதவி பெற்ற அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. அரசு சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 15-ந் தேதி மதுரை மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
முதற்கட்டமாக 10 சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினோம்.
2-வது கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடக்கிறது. 24-ந் தேதி வரை நடக்கும் இந்த பேரணியில் மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவோம்.
இதனைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
அவர் தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டார். திருப்பரங்குன்றம் தொகுதி இரட்டை இலையின் கோட்டை ஆகும். எனவே டி.டி.வி.தினகரன் அங்கு வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RBUdhayakumar #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்