என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "thiruvadanai"
தொண்டி:
திருவாடானை தென் பகுதியில் உள்ள அரும்பூர், ஆதியூர், குளத்தூர், திருவெற்றியூர், விளக்குடி, புலிக்கொடி, பகவதி மங்கலம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொண்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் 20 நாட்களுக்கு மேலாக பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இரவு நேரத்திலும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்புமின்றி மின்தடை செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுகின்றனர்.
மேலும் திருவெற்றியூரானது முக்கியமான பாகம் பிரியாள் கோவில் உள்ளதால் வணிகதலமாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரும் முக்கியமான ஆன்மீக தலமாகவும் உள்ளது.
இந்தப்பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகிறது. பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் குடிதண்ணீர் மோட்டார்களை இயக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
வீடுகளில் மின்விசிறிகள் இயங்காமல் குழந்தைகள் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
நகரங்களை விட கிராமங்களில் மின்தடை சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பகல் முழுவதும் தடை செய்வது மின்வாரியத்தின் மோசமான நடவடிக்கை ஆகும்.
மின்தடை செய்யும்போது கிராமங்களுக்குள் பாகு பாடில்லாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக நேரம் செயற்கையாக மின்தடை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
எனவே மாவட்ட அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து முன்னறிவிப்போடு மின் தடைசெய்ய வேண்டும் என கிராம மக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவாடானை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக பேரணி வந்தது. அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பலரும் பேசினர்.
இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.