search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvalluvar Day Festival"

    • ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் சிவகுமார் தலைமை தாங்கி–னார். கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்கள் தேசிய மாணவர் படையினர், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், திருவள்ளுவரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    திருக்குறளில் உள்ள வாழ்வியல் முறைகள், உளவியல் சிறப்புகள், வேளாண் தொழில் பெருமைகள் ஆகியவற்றை தினமும் கடைபிடித்து முன்னேறவும் குறளை அனைவரிடமும் பரப்பவும் உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியர் துரைசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் சக்திவேல், வக்கீல் சக்திவேல், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் செந்தில்குமார், இந்துஸ்தான் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜெகநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×