என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvilaku Poojai"
- காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சி நடந்தது.
- இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரம் தேரோட்டம், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிவகிரி சேனைத்தலைவர் சமூகத்தினரால் 6-ம் திருநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சியும், காலை 11 மணியளவில் 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு பகுதியில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கணபதி சுந்தர குருக்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடியும், மந்திரங்கள் ஓதியும் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்குகளை ஏற்றிவைத்து பக்தி பாடல்கள் பாடினர்.
விளக்கு பூஜைக்கு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைஞர் மூக்கையா, செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் நடத்தினர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இரவு 10 மணிக்கு மேல் தீபாராதனை காட்சியும், முத்துக்குமாரசாமி மயில் வாகனத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.