என் மலர்
நீங்கள் தேடியது "Thisayanvilai"
- திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 11 கிராம் எடைகொண்ட 3 பொட்டு தாலிகள், கோவில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 ஜோடி கண்மலர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகி கந்தசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனர்.
- குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
ராதாபுரம் யூனியன் ஆணையாளர் விமலா பிளாரன்ஸ், குமார புரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் அனிஷா பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.
- அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது.
திசையன்விளை:
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.
அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிசான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவர் ஜிஸ்னுமோன்னை கல்லூரி தாளாளர் வி.எஸ்.கணேசன், செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ், கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி மற்றும் கேப்டன்கள், மாணவர்கள் பாராட்டினர்.
- திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது.
- விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
திசையன்விளை:
திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளில் பல்வேறு வகையான கலைநிகழ்சிகள் நடந்தது. மாணவி கேத்ரின் ரெஜினா நன்றி கூறினார்.
- திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர்.
- இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3500 திருட்டு போயிருந்தது. உடனே அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மாணவர்களுக்கு வடிவங்கள், நிறங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்து அட்டைகள், பழங்கள், காய்கறிகளின் மாதிரிகள் போன்றவற்றை கொண்டு அறிவுத்திறன் சோதித்து அறியப்பட்டது.
யு.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் மனநிறைவுடன் சென்றனர்.
- நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் தீப்பந்தபோராட்டம் நடந்தது.
- பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திசையன்விளை:
ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தீப்பந்தபோராட்டம் நடந்தது. பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மகாத்மா காந்தி வேஷம் அணிந்து வந்தவரிடம் மத்திய அரசுக்கு எதிரான மனுக்களை கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் கலந்துகொண்டு பேசினார் போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மருதூர் மணிமாறன், விஜயபெருமாள், எஸ்.ஜி.ராஜன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வேலம்மாள், விமலா, பிரியா, லீலாவதி, லதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, ராஜேஷ்வரி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்
- ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
திசையன்விளை:
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தாமரை பாரதி மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, தகவல் தொழில்நுட்ப அணி ராதாபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கெனிஸ்டன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, நவ்வலடி கிளை செயலாளர் தில்லை ராஜா, நவ்வலடி சரவணகுமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலசுப்ரமணியம், ராதாபுரம் அரவிந்தன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராம் கிஷோர் பாண்டியன், லிங்கதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், குமார், ஸ்டாலின், பிரின்ஸ், டென்னிஸ், முத்தையா, வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
திசையன்விளை:
திசையன்விளை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் விஜயேஸ்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மேலும் கல்வி ஊக்க தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
- முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
திசையன்வினை:
திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.
முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர் ஆளுமை பண்பு வளர்த்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
திசையன்விளை:
திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார். மேலும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் யமுனா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 'ஆளுமை பண்பு வளர்த்தல்' என்னும் தலைப்பில் 'ஆளுமை பண்பே நம் ஒவ்வொருவரின் சிறந்த தலைமை பண்பு' என ஒளிப்பட காட்டியின் மூலம் பண்படுத்துதல், வளர்ச்சி, மனநிலை குறித்து வகுப்புகள் நடத்தி சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் இந்துமதி, உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர், கணிதத்துறை உதவி பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.