என் மலர்
நீங்கள் தேடியது "Thondamuhur"
- நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கூலி ெதாழிலாளி.
இவர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மனைவி தீபிகா ஏற்கனவே திருமணமாகி சில மாதங்களில் கணவரை பிரிந்தார். பின்னர் அவர் தனியாக வசித்து வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
அது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் வழக்கம் போல அறையில் தூங்க சென்றோம். காலை எழுந்து பார்த்த போது எனது மனைவி தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. எனது மனைவி வீரகேரளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.
அதை நான் கண்டித்தேன். இதனால் எனது மனைவி அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடித்து தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.