என் மலர்
நீங்கள் தேடியது "Thorana Malai"
- முருகன் கோவில் மூலஸ்தானத்தை அடைய சுமார் 1193 அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
- சிவந்திபுரம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
கடையம்:
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால், முனிவர்களால் வழிபடப்பட்ட பழமையும்- பெருமையும் உடையதாகும்.
மலை மீது உள்ள முருகன் கோவில் மூலஸ்தானத்தை அடைய சுமார் 1193 அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மேலும் விவசாயம் செழிக்கவும் பருவமழை பொய்க்காது பெய்யவும் விவசாயம் செழித்து நாடுநலம் பெற வேண்டி மலை மீதுள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
மலை மீது இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவந்திபுரம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
விழாவில் மடத்தூர் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆதி நாராயணன்- சந்திரலீலா நினைவு நூலகத்தில் நடைபெற்றது. சிறப்பு இன்னிசைக் கச்சேரி மற்றும் காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை எலும்பு முட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.