search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat killing"

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கே.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நித்யா (வயது 33). எம்.எஸ்.சி., பி.எட். முடித்துள்ள இவருக்கும், சாப்டூரை சேர்ந்த மாசாணம் மகன் சஞ்சய்காந்திக்கும் (31) கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    அப்போது பெண் வீட்டார் சார்பில் 125பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், ரூ.7 லட்சம் ரொக்கம் வரதட்சனையாக கொடுக்கப்பட்டது.

    பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சஞ்சய்காந்தி பணிபுரிந்ததால் திருமணத்திற்கு பிறகு நித்யாவை அங்கு அழைத்து சென்றார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நித்யா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் 25 பவுன் நகை கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு செய்வதாகவும், மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறும் வலியுறுத்துகின்றனர். மறுத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சய்காந்தி, அவரது பெற்றோர் மாசாணம்- பஞ்சவர்ணம், அக்காள்கள் அங்காள ஈஸ்வரி, சைலஜா, உறவினர் கனகராஜ் ஆகிய 5 பேரை மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    ×