search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Threatened the public"

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.
    • பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களையும், வாகன ஓட்டி களையும் அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றி வருவதாகவும், அதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நெல்லை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

    இதனையடுத்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வாசுதேவன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் இன்று 2-வது நாளாக பணியாளர்கள் தச்சை மண்டலம் பகுதிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, செல்வி அம்மன் கோவில், உடையார்பட்டி, மீனாட்சிபுரம், எஸ்.என் ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.

    மேலும் நெல்லை மாநகராட்சி முழுவதும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    ×