என் மலர்
நீங்கள் தேடியது "Threatened to Police"
- நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தென்னிமலை பகுதியில் ரோந்து சென்றனர்.
- அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தென்னிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரிடமிருந்த சாக்கு பையை சோதனையிட முயற்சி செய்த போது, பூல்பாண்டி போலீசாரை பார்த்து அவதூறாக பேசினார்.
மேலும் அருகில் வந்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் சாக்கு பையில் 20 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.