என் மலர்
நீங்கள் தேடியது "Three grand"
- வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. சேர்மன் வி.பி.எம். சங்கர் தொடங்கி வைத்தார். தாளாளர் பழனி செல்வி சங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்.
துணை சேர்மன் தங்க பிரபு முன்னிலை வகித்தார். இயக்குநர் நாச்சியார் கண்ணன் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா மற்றும் கலைக்கல்லூரியில்அடுப்பு இல்லாமல் சமைக்கும் உணவு திருவிழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன.
இதில் கலைக்கல்லூரி மாணவிகள் தனித்தனி குழுவாக இணைந்து அடுப்பு இல்லாமல் உணவுப்பொருட்களை சமைத்து காட்சிப்படுத்தினர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மாணவிகளின் மேம்பாட்டு திறன் வளர்ப்பு அங்கீகாரம் பெற்ற பேச்சாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.