search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thrissur"

    • திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.

    • மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
    • நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

    மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலுமே பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பா ளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தல் மூலமாக கேரளாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாரதிய ஜனதா, அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை போட்டியிட செய்தது.

    மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ் கோபி, கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட வர்களை களமிறக்கியது. அவர்களது வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தொகுதி களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் பதித்தது. அந்த நிலையை தனது வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் சுரேஷ் கோபி பெற்றுத் தந்திருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போதே நடிகர் சுரேஷ்கோபி வெற்றிபெற்றால், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

    மேலும் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வர்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயமாக மத்திய மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கேபினட் மந்திரி அந்தஸ்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் சுரேஷ்கோபி இன்று நேரில் சந்திக்க உள்ளார். மத்திய மந்திரி பதவி பற்றி நடிகர் சுரேஷ்கோபியிடம் கேட்ட போது, "மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும். நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்" என்றார்.

    கேரளாவின் கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிபிசி நிறுவன விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். அதன்பின்னர், திருச்சூரில் பா.ஜ.க இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது.

    சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவையனைத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது.



    காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம், ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

    சபரிமலை விவகாரத்தில் கேரளாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் முரண்பட்ட நிலைபாட்டில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் விஞ்ஞானி நம்பி நாராயணனை அரசியல் ஆதாயத்துக்காக பொய்வழக்கில் சிக்க வைத்தனர். அரசியல் ஆதாயத்துக்கு தேச நலனை சேதப்படுத்தியதுடன் தேசப்பற்றுமிக்க விஞ்ஞானிக்கும் தொல்லை தந்தனர். வலிமையான இந்தியாவை உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    திருச்சூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் அகுள். இவரது மனைவி பிரிதா. இவர்களது மகன் அஜி கிருஷ்ணன் (வயது 7). இதே குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் அருண். இவரது மகன் அபிமன்யூ (9). குடியிருப்பு வளாகம் பகுதியில் ஒரு குளம் உள்ளது.

    நேற்று மாலை சிறுவர்கள் அங்குள்ள குளம் அருகே விளையாடினர். விளையாடி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். அஜி கிருஷ்ணன், அபிமன்யூ ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    சிலர் குளத்தை எட்டிப்பார்த்தபோது சிறுவர்கள் 2 பேரும் பிணமாக மிதந்தனர். தகவல் அறிந்ததும் திருச்சூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். பெற்றோர் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவர்கள் பலியானது தெரியவந்தது.

    கேரள மாநிலம் திருச்சூரில் மீனவரின் வலையில் சிக்கிய மிக அழகியதும், கொடிய விஷத்தன்மை கொண்ட அபூர்வ லயன் மீனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். #LayanFish
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எடக்கழியூரை சேர்ந்தவர் அபுபக்கர். மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கடற்கரையில் மீன் பிடிக்க சென்றார்.

    கடலில் வலை வீசியபோது 2 அதிசய மீன்கள் சிக்கின. லைன் மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன்களுக்கு ஷீபா மீன், டர்க்கி மீன் என்ற வேறு பெயர்களும் உண்டு. இந்த வகை மீன்கள் இந்தோ- பசிபிக் கடலில் மட்டுமே கிடைக்கும்.

    மிக அழகிய வகையான மீன் வகையை சேர்ந்த இவைகள் கொடிய வி‌ஷத்தன்மை கொண்டதாகும். மீன் தொட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த மீன்களை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து சென்றனர்.#LayanFish
    ×