search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "through the website for"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008-ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரி க்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே விண்ணப்ப ங்களை வரும் 30-ந் தேதி முடிய பதிவு செய்யலாம். 30-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ண ப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    குறிப்பிட்ட காலக்கெ டுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன் புல வரைபடம் (6 நகல்கள்) கிரைய பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய தற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் ( நிரந்தர கணக்கு எண் அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்திய தற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவல–கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டது எனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×