என் மலர்
நீங்கள் தேடியது "Ticket scam"
- மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை.
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதுவும், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ரூ.4,000 டிக்கெட் பிளாக்கில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிளாக்கில் டிக்கெட்டை விற்பனை செய்த நபரின் வீடியோ வெளியானதால் ரிசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சீட்டு பணம் மோசடி செய்த பஸ் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் வீதியைச் சேர்ந்த சேது பாஸ்கர் மனைவி பாண்டீசுவரி.
இவர் தெப்பக்குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில், முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் வசிக்கும் இளங்கோவன் (45), அவரது மனைவி கவிதா (40) ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கு சீட்டு போட்டிருந்தேன்.
இதற்கான பணத்தை முறையாக செலுத்தி வந்தேன். இந்த நிலையில் இளங்கோவன் தம்பதியினர் சீட்டு பணம் வசூலிப்பதை பாதியில் முடிவுக்கு கொண்டு வந்தனர். நான் அவர்களிடம் செலுத்திய பணத்தை கேட்டேன்.
அவர்கள் திருப்பி தர மறுத்து விட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டீசுவரி புகார் கொடுத்துள்ள இளங்கோவன், மதுரை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
- கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.
மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.
இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.