என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger attack"

    • கணவனும், மனைவியும் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • மனைவி கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், குமரம் பீம் மாவட்டம்,சிர்ப்புர் அடுத்த டுப்பாக்குடாவை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மனைவி சுஜாதா. இருவரும் நேற்று நிலத்திற்கு சென்று விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென பாய்ந்து வந்து சுரேசை தாக்கியது. இதில் சுரேஷின் கழுத்து மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுரேஷ் வலியால் அலறி துடித்தார்.

    இதனைக் கண்ட அவரது மனைவியை சுஜாதா அங்கிருந்த கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார். இதனைக் கண்ட புலி அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது.

    அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு சிர்புர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மஞ்சரியாலா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று முன்தினம் லட்சுமி என்ற பெண்ணை புலி கடித்து கொன்றது. அதே புலி தான் நேற்று விவசாயியை தாக்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று மதியம் வருகிறார்.
    • குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பஞ்சரக் கொல்லி பகுதியை சேர்ந்த வனக்காவலர் அச்சப்பன் என்பவரின் மனைவி ராதா கடந்த 24-ந்தேதி காபி பறித்துக் கொண்டிருந்த போது புலி தாக்கி கொல்லப்பட்டார்.

    அந்த புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவை சேர்ந்த ஜெயசூர்யாவும் புலியின் தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து அந்த புலி ஆட்கொல்லி புலி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த புலியை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் பெண்ணை கொன்ற ஆட்கொல்லி புலி, பிலாக் காவு அருகே உள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்தது. 7 வயது பெண் புலியான அது எப்படி இறந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் புலி தாக்கி இறந்த ராதாவின் குடும்பத்தினரை சந்திக்க வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று மதியம் வருகிறார்.

    பின்பு சாலை மார்க்கமாக மானந்தவாடிக்கு செல்கிறார். அங்கு அவர் புலி தாக்கி பலியான ராதாவின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    பின்பு கல்பெட்டாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதியம் நடக்கும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திலும் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.

    அதன்பிறகு மேப்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரியங்காகாந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    கொடைக்கானல் மேல்மலையில் புலி தாக்கி அடுத்தடுத்து 5 மாடுகள் பலியான சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் வனப்பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    வனத்துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய்து வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கூக்கால் வனப்பகுதியில் 4 காளை மாடு மற்றும் ஒரு பசு மாடு என 5 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாடுகளின் உடலில் வன விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருப்பதால் புலி தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.இதனையடுத்து வன அதிகாரி பழனிக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர் தங்கராஜ் தலைமையில் இன்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே புலி தாக்கித்தான் இறந்ததா? அல்லது வேறு வன விலங்குகள் கடித்ததா? என தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    ×