search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger death"

    • ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது.
    • பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இதில் புலி ஊருக்குள் புகுந்து மக்களை அடிக்கடி தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து அந்த புலியை உயிருடனோ, சுட்டுப் பிடிக்கவோ வனத் துறை உத்தரவிட்டது.

    அதன் பேரில் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்ற நிலையில், காட்டுப் பகுதியில் அந்த புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

    அந்த புலி எப்படி இறந்தது? என்பது மர்மமாக உள்ளது. இந்த மர்மம் விலகு வதற்குள் நேற்று ஒரேநாளில் 3 புலிகள் இறந்த நிலையில் வயநாட்டில் தனித்தனியாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெற்கு வயநாடு வனப்பிரிவின் சுண்டேலுக்கு அருகில் உள்ள ஓடதோடு பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் சுமார் 1 வயது பெண் புலி சடலத்தை முதலில் அந்தப் பகுதியினர் பார்த்துள்ளனர்.

    ஆனால் அந்தப் புலியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து வந்து புலியின் உடலை மீட்டனர். இந்த சூழலில், வயநாடு வன விலங்கு சரணாலயத்தின் கீழ் உள்ள குறிச்சியாடு வனப்பகுதியின் தத்தூர் பிரிவில் ஆண், பெண் என மேலும் 2 புலிகளின் சடலங்கள் வனத்துறையால் கண்டெடுக்கப்பட்டன.

    இதில் ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது. அது எப்படி நடந்தது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி வயநாடு வனவிலங்க காப்பாளர் வருண் டாலியா கூறுகையில், இது புலிகள் இனச்சேர்க்கை செய்யும் காலம். அப்போது பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    இந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் புலிகள் தங்கள் பகுதியை கடுமையாக பாதுகாப்பதால் மோதல்களுக்கு வழி வகுக்கும் என்றார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெற்ற பிறகு தான் புலிகள் இறப்புக்கான காரணம் உறுதியாக தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே ஓரே நாளில் 3 புலிகள் சடலம் கிடந்தது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வனம் மற்றும் வனவிலங்கு மந்திரி சசீந்திரன் உத்தர விட்டுள்ளார். இதற்காக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் கொண்ட தனி குழுவும் அமைத்துள்ளார். இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு அதன் மாமிசத்தை புலி உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

    இதையடுத்து, புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    சேகரிடம் விசாரணை நடத்தியதில், அவரது மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக தெரியவந்துள்ளது.

    ×