என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tihar jail"

    • திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்
    • திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் - கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

    இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.

    ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல்
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விமான நிலையம் மற்றும் பள்ளிகளைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.

    இதைதொடர்ந்து, டெல்லி போலீசார் சிறைக்குள் சோதனை நடத்தி வருகின்றனர், இதுவரை வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள், இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை.

    ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு 33 இடங்களைக் கொடுத்தது. அங்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன.

    உண்மையான பிரச்சனை என்னவென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு 3 நாளுக்கு முன் அவர்கள் ஏன் போலியான கருத்துக்கணிப்பைச் செய்யவேண்டும் என்பதுதான். இது தொடர்பாக பல கோட்பாடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று அவர்கள் இயந்திரங்களைக் கையாள முயற்சிக்கிறார்கள்.

    கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி பேட்டியில் கூறினார்.

    நான் அனுபவம் வாய்ந்த திருடன் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் ஆதாரம் இல்லை, என்மீது எந்த மீட்டெடுப்பும் இல்லை, அதனால் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தீர்களா? இவனை சிறையில் அடைத்தால் முடியும் என்று நாடு முழுக்க ஒரு செய்தியை கொடுத்தார்.

    ஒரு போலி வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து சிறையில் அடைப்பேன். நான் இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது.

    அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது சிறையும் பொறுப்பு என பகத்சிங் கூறினார். நாட்டை விடுவிக்க பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை. பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். நானும் தூக்குமேடை ஏற தயார் என தெரிவித்தார்.

    திகார் சிறையில் சரணடைவதற்கு முன் காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி மந்திரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமின் நேற்று முடிவடைந்தது.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

    முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி மந்திரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் திகார் சிறையில் இன்று மாலை சரணடைந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.  மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
    • உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதி்க் போதைப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய, சென்னை ஆவடியை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப்பின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.

    • ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார்.
    • தீபக் சர்மா துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    டெல்லி:

    டெல்லி திகார் ஜெயிலின் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் கோண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றுள்ளார்.

    அந்த விழாவில் நடிகர் சஞ்சய்தத் நடித்த 'கல்நாயக்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார். அப்போது திடீரென தீபக் சர்மா வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தீபக் சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தீபக் சர்மாவை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்று வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
    சண்டிகார்:

    அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா.

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர் முதல்-மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் பரோல் கேட்டு இருந்தார். நிபந்தனையுடன் அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பரோலை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா தரப்பில் முறையிட்டது.

    அப்போது டெல்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது குறித்த நிபந்தனையை டெல்லி அரசு விலக்கிக்கொண்டது.

    இதை தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
    மனித உரிமையை மீறி தாக்கியதாக தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் புகார் தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட்டு தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் மனித உரிமையை மீறி தாக்கியதாக புகார் செய்திருந்தனர்.

    இது தொடர்பாக திகார் ஜெயிலில் மிக பாதுகாப்பு வார்டில் உள்ள 15 கைதிகள் தங்களை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் தாக்கினர் என்றும், சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடப்பதாகவும், மனித கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறி கடிதம் எழுதி இருந்தார்கள்.

    இதையடுத்து கைதிகள் கடிதத்தை அடிப்படையாக வைத்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், திகார் ஜெயில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசின் விளக்கத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் சிறைத்துறை இயக்குனர், தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #DelhiHighCourt
    டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. #TiharJail #TNPolice #CBI
    புதுடெல்லி:

    டெல்லி திகார் சிறையில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 போலீசார் உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இதில் 18 கைதிகள் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில், ஒருவரான சின்மய் கனோஜியா என்ற கைதி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, உண்மை கண்டறியும் குழு அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்தனர். பின்னர் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கைதிகள் தாக்குதலுக்கு ஆளானதால் காயம் அடைந்தனர் என கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து உண்மை கண்டறியும் குழு இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 53 போலீசார் மீது சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஏற்கனவே தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைதிகளும் தங்களை தாக்கியதாக, திகார் சிறை அருகே உள்ள ஹரிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியும் ஒரு புகார் அளித்தார். அதில் திகார் சிறையில் கடந்த நவம்பர் 21-ந் தேதி போலீசார் சோதனை செய்தபோது, வார்டு 6-ல் ‘சி’ பிளாக் பிரிவில் உள்ள காஷ்மீர் பயங்கரவாதிகள் ஆதிஷம், ஹக்கீம் உள்ளிட்ட பல கைதிகள் தங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சிறையில் அபாய மணி அடித்த பிறகு சிறப்பு காவலர்கள் வந்து சம்பந்தப்பட்ட கைதிகளை தடுத்து மீண்டும் சிறையில் அடைத்தனர். கைதிகள் நடத்திய தாக்குதலில் சில போலீசாரும் காயம் அடைந்துள்ளனர் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  #TiharJail #TNPolice #CBI
    நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன்? என திகார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NirbhayaMurderCase #DCW
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்த பெண் 13 நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தாமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

    டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. அவர்களது மேல்முறையீட்டு மனுவில் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அவர்களது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என டெல்லி மகளிர் ஆணையம் திகார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #NirbhayaMurderCase #DCW
    ×