என் மலர்
நீங்கள் தேடியது "TikTok app"
- சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது
- அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.
வாஷிங்டன்:
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என கூறியது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்:
பிரபல சமூகவலைதள செயலியான 'டிக்-டாக்' தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதனால் 'டிக்-டாக்' செயலி புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது.
- டிக் டாக் செயலி தடைபட்டால் அதை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.
- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
‘டிக்டாக்’ செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 15-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. #SCplea #MadrasHC #banTikTok #banTikTokapp