என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tim Paine"
- தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன்.
- இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது கேப்டவுனில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. பந்து 'ஸ்விங்' ஆவதற்காக ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் உப்புதாள் கொண்டு பந்தை தேய்த்ததும், அதற்கு கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. கேப்டன் பதவியையும் சுமித் இழந்தார். அவருக்கு பதிலாக டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது.
2021-ம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றிய டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரச்சினையில் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் 4 ஆண்டுக்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தும் யுக்தியை கையாண்டதாக டிம் பெய்ன் பரபரப்பான குற்றச்சாட்டை இப்போது கிளறியுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்த விஷயம் குறித்து கூறியிருப்பதாவது:-
கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த உப்புத்தாளை எடுத்து பந்தை தேய்க்கும் காட்சியை திரையில் பார்த்ததும் ஒருகனம் அதிர்ச்சியில் உறைந்து போனோம். கிரிக்கெட்டில் பந்தின் தன்மையை மாற்ற முயற்சிப்பது நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் உப்புத்தாளை கொண்டு தேய்த்தது வேறு மாதிரி. இது வெட்ககேடான செயல். ஆனால் இது மாதிரி செய்ய வேண்டும் என்று அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையில் சுமித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.
3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம், வீரர்களுக்கு தடை குறித்து அதிகமாக பேசப்பட்டன. அதன் பிறகு 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியினர் பந்தை சேதப்படுத்தியதை நான் பார்த்தேன். நான் பந்து வீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த போது, 'மிட்ஆப்' திசையில் நின்ற ஒரு தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன். ஆனால் பான்கிராப்ட்டின் செயலை அம்பலப்படுத்திய அந்த டெலிவிஷன் இயக்குனர் இந்த காட்சியை திரையில் இருந்து உடனடியாக நீக்கி விட்டார். இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அந்த வீடியோ காட்சியை மீண்டும் காண்பிக்கவில்லை.
இவ்வாறு அதில் டிம் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பெர்த் டெஸ்டில் விராட் கோலி - டிம் பெய்ன் நேருக்குநேர் மோதிக்கொண்டனர். மெல்போர்ன் டெஸ்டில் டிம் பெய்ன் - ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடையில் கடும் வார்த்தைப்போர் நடந்தது.
ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது டிம் பெய்ன் ‘‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள். ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். சரியா...’’ என்று கூறி கேலி செய்தார்.
இதற்கு ரிஷப் பந்த் சுடச்சுட பதிலடி கொடுத்தார். டிம் பெய்ன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் நின்ற ரிஷப் பந்த், ஜடேஜாவை நோக்கி ‘‘நமது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். எப்போதாவது தற்காலிக கேப்டனை (ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி கேப்டனாக்கப்பட்டவர்) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவரை நீ அவுட் ஆக்க தேவையில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார். பேச மட்டுமே அவருக்கு தெரியும்’’ என்றார்.
பிறகு அருகில் நின்ற மயாங்க் அகர்வாலிடம், ‘‘தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை கேள்விபட்டு இருக்கிறாயா? எனக்கு தெரியும்’’ என்று கூறி கிண்டலடித்தார். இந்த பேச்சுகள் எல்லாம் ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் பதிவானது. ரிஷப் பந்தின் பேச்சை கேட்ட நடுவர் அவரை அழைத்து எச்சரித்தார்.
இந்நிலையில் ரிஷப் பந்த் சென்றார் டிம் பெய்னின் மனைவியை சந்தித்து குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். டிம் பெய்ன் குடும்பத்துடன் ரிஷப் பந்த் இருக்கும் படத்தை, அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரிஷப் பந்த் ‘‘சிறந்த குழந்தை பராமரிப்பாளர்’’ என்று பாராட்டியுள்ளார்.
மைதானத்திற்குள் கடுமையாக மோதிக் கொண்ட போதிலும், டிம் பெய்ன் வீட்டிற்கு ரிஷப் பந்த் சென்றதை டுவிட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ரிஷப் பந்த் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனும் ஆன டிம் பெய்ன் அவரை சீண்டினார். டிம் பெய்ன் சீண்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
ரிஷப் பந்த் பற்றி டிம் பெய்ன் கூறுகையில் ‘‘தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எம்எஸ் டோனி இடம்பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிக்பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடலாம். நதிக்கரையோரம் அமைந்துள்ள மிகவும் அழகான நகரம்’’ என்றார்.
முதல் இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்யும்போது ஐபிஎல் தொடர் குறித்து ரோகித் சர்மாவை கிண்டல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இருவருக்குமிடையிலான வார்த்தை மோதல் (sledging) எல்லையை மீறவில்லை என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘வார்த்தைப்போர் மிகவும் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். போட்டியில் இரண்டு நாட்டு கேப்டன்களும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்த முயற்சி செய்தார்கள். அதில் குற்றமோ, உண்மையான ஆக்ரோசமோ இருந்ததாக நான் நினைக்கவில்லை.
உண்மையிலேயே, அங்கு சற்று நகைச்சுவை இருந்தது. டெஸ்டில் போட்டியில் இதுபோன்ற வேடிக்கைகள் இருக்கத்தான் செய்யும். இது போட்டியின் சிறப்பான ஒரு பகுதி. எப்போதுமே ஆஸ்திரேலியா அணி விளையாடும்போது இதுபோன்ற நகைச்சுவைகள் இருக்கும்’’ என்றார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிம்பெய்ன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் டி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் சரியானதல்ல. இந்த தொழில் நுட்பத்தில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் டெஸ்டில் இந்திய வீரர் ரகானே கேட்ச் ஆனதாக நடுவர் தீர்ப்பு வழங்கினார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தபோது பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது. இதனால் அவுட் முடிவு திரும்ப பெறப்பட்டது.
இதேபோல் புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட 2 அவுட்டுகள் டி.ஆர்.எஸ். முறையில் திரும்ப பெறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி தான் ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #TimPaine
டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இதை டிம் பெய்ன் உறுதி செய்துள்ளார். அத்துடன் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மார்னஸ் லபுஸ்சேக்னே
துபாய் டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச், 2. உஸ்மான் கவாஜா, 3. மிட்செல் மார்ஷ், 4. ஷேன் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. மார்னஸ் லபுஸ்சேக்னே. 7. டிம் பெய்ன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. நாதன் லயன், 10. பீட்டர் சிடில், 11. ஹோலண்ட்.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 1 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்னிலும், ஜோ ரூட் 1 ரன்னிலும், மோர்கன் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார். அடில் ரஷித்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், சதம் அடித்து கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 122 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.
அவரது பேட்டிங்கை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா கேப்டன், தற்போதைய நிலையில் டோனியை விட ஜோஸ் பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பட்லர் சிறந்தவர். மிகவும் சிறந்தவர். தற்போதைய நிலையில் ஒயிட் பால் போட்டியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.
அவருக்கு போட்டியாக தற்போது ஏராளமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. எம்எஸ் டோனி மிகவும் சிறந்த வீரர். ஆனால், தற்போதைய நிலையில் பட்லர் முன்னிலையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டியில் தனது பலன் என்ன என்பதை புரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்