என் மலர்
நீங்கள் தேடியது "Tiruchendur"
- பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
சுப முகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.
- தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
- 11-ம் திருவிழாவான நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8-ம்திருவிழா அன்று காலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா, மதியம் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் பெரிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தேரை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கதிரேசன் ஆதித்தன், தலைமை நீதித்துறை நடுவர் வசித்குமார்,திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திருப்பதி மற்றும் குமரேச ஆதித்தன், ரெங்கநாத ஆதித்தன், டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், சிவபாலன் ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், சரவண ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமாரர் ராமசாமி ஆதித்தன், சேகர் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேச ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.

11-ம்திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம்திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா ஆகும்.
- விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளது
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா ஆகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தங்கத்தேரில் வீதிஉலா
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி அங்க பிரதட்சணம் செய்தும் விரதத்தை தொடங்கினர்.
நேற்று இரவு 7 மணி அளவில் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் திரு வாடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தங்கத்ேதரில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அரோகரா கோஷம்
தங்கத்தேரில் ஏற்பட்ட சில பழுது காரணமாக கடந்த 7 மாதமாக கிரி வீதி யில் உலாவருவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தங்கத்தேர் சரிசெய்யப்பட்டு நேற்று இரவு கிரி வீதியில் உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சாமி தரிசனம் செய்தனர்.
2-ம் நாள்
2-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4மணிக்கு உதய மார்த்தான்ட அபி ஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.மாலை 3.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளது. 66 இடங்களில் குடிதண்ணீர் வசதி, 320 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் வசதி, 19 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
6 இடங்களில் அகன்ற திரை மூலம் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி திரு விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் விரதம் இருந்து வருகின்றனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி சிறப்பு விருந்தினரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினர் கணினி துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான உதயவேல், மற்றொரு சிறப்பு விருந்தினரான விலங்கியல் துறை பேராசிரியர் லிங்கதுரையை அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கணேஷ், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இயற்பியல் துறை தலைவர் பாலு, முனைவர் சேகர், பொருளியல் துறை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த முனைவர் அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நிவேதா உள்பட திரளான மாணவர்கள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றனர்.
- செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது
- சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமை நடத்தியது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் முகாமில் பங்கேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் முத்துக்குமார், சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.
முகாமில் 50 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, அலுவலர்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.
- பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடந்தது
- பல்வேறு பொருட்களை செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மத்திய மனிதவள மேம்பாடு மையத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் மற்றும் கல்லூரியின் தொழில் முனைவோர் அலகு இணைந்து பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது.
இதன் தொடக்க விழா கல்லூரியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது. முனைவர் மாலைசூடும் பெருமாள் இறைவணக்கம் பாடினார். இன்னோவேசன் கவுன்சில் அமைப்பாளர் முனைவர் நித்யானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, இன்னோவேசன் கவுன்சில் பணிகளை பாராட்டினார்.
கல்லூரி செயலர் முனைவர் ஜெயக்குமார், பயிற்சி பட்டறையின் நோக்கங்களை விளக்கி பேசினார். மல்லிகை பனை பொருள் அங்காடியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் கிரேஷ் ஜூலியட் டயானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை செய்தனர். பயிற்சி பட்டறையின் முடிவில், இன்னோவேசன் கவுன்சில் செயல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீேதவி நன்றி கூறினார்.
- கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
- திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 (சுயநிதி பிரிவு) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது மேற்பார்வையில் சுமார் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 62 பேர் ரத்ததானம் வழங்கினா். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். நிகழ்ச்சி முடிவில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணிப்பொறி தலைவர் வேலாயுதம் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பேராசிரியர் பார்வதி தேவி மற்றும் மாணவ செயலர்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- மாணவர்கள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர்.
- விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம் மற்றும் நாட்டுப்புறக் கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44, 48 ஆகியவை இணைந்து கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர். மேலும் நெருப்பை உபயோகிக்காமல் விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர். சிறப்பாக செய்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். நடுவர்களாக விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேலு, கணிணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, கணிதவியல் துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன், நூலக கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், பொருளியல் துறை பேராசிரியர் முத்துக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, விலங்கியல் துறை பேராசிரியை வசுமதி, ஆரோக்கிய மேரி பெர்ணான்டோ மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ஷோலா பெர்ணான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவின் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 48-ன் திட்ட அலுவலர் கவிதா, நாட்டுப்புறக் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்
- சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
- தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம் என கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பயின்றோர் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினித்துறை பேராசிரியர் ஜென்ஸி வரவேற்று பேசினார். பயின்றோர் கழக செயலாளர் ஜோஸ்வா பாபு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் 'தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம்' என்றார்.
தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் 15 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை கணினித்துறை பேராசிரியர் கேசவராஜா நடத்தினார். இதில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து, சிவந்தி கோப்பையை வென்றது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது.
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. முடிவில், தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.
- நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தோட்டக்கலை க்ளப் சார்பில் நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் தோட்டக்கலை இயக்குநர் பாலகிருஷ்ணன், நோனி தாவரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்க உரையாற்றி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் ஆரோக்கிய மேர் பர்னாந்து தோட்டக்கலை துறையின் அறிக்கையை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் மரக்கன்று நடுதலை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல் மற்றும் கதிரேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் பேராசிரியர்கள் முத்துக்குமார், வசுமதி, கவிதா மற்றும் மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். தோட்டக்கலை பிரிவின் மற்றொரு நிகழ்வாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைப்பு செய்தனர். கல்லூரியில் உள்ள தோட்டத்தில் பனை விதை விதைப்பு விழா நடைபெற்றது.
விழாவில் இளையோர் செஞ்சிலுவை சங்க இயக்குநர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பனை விதை விதைப்பை தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலை பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா, ராஜ்பினோ ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லூரியின் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் அலுவலர்கள் ஜெயராஜ், பாலமுருகன், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேராசிரியர்கள் லிங்கதுரை நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் செய்திருந்தனர்.
- திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
- சந்தனகுமாரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
மிரட்டி செல்போன் பறிப்பு
சம்பவத்தன்று பணி முடித்து மாலையில் வீடு திரும்பினார். சங்கிவிலை- குமாரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு வந்த வீரபாண்டிய பட்டணம் முத்து நகரை சேர்ந்த நம்பிராஜன் (வயது24), வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து சந்தனகுமாரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவரிடம் பணம் இல்லாததினால் அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பிராஜன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்செல்வி, யூனியன் கவுன்சிலர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு காமிரா இயக்கத்தை மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொன்பாய், மெர்சி, ஊர் பிரமுகர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.