search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur District Collector"

    • அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தினர் தங்களது இடங்களை வழங்கினர்.
    • கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் வட சென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தி னர் தங்களது இடங்களை வழங்கினர். அவர்களுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் நிலம் உரிமையாக்க பட்டா வழங்கப்படவில்லை.

    இதையடுத்து தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல கட்ட போராட் டங்கள் நடத்தினர். ஊராட்சி மன்றம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எனினும் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்களின் போராட்டம் கடந்த 32 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கி மாற்று இடத்தில் வசிக்கும் 531 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வருவாய்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவில், துணைத் தலைவர்கதிர்வேல் முன்னிலையில் தற்போது வீடுகளை அளவிடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பட்டா வழங்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். விரைவில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கபணிக்கு இடம் வழங்கிய கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

    • 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்.
    • கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராத தொகையாக விதிக்கப்படும் நடைமுறை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் காவல்துறையுடன் இணைந்து பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும்.

    இந்த கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுவிடம், கால்நடை வளர்ப்பவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று, பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் கொண்டு செல்லலாம்.

    24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும். எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கால்நடைகளை தொடர்ந்து பொதுவெளியில் விடும்பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு, போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×