search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tisaiyanvilai"

    • தனது மனைவியின் நடத்தையில் அகிலன் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்(வயது 38). மீனவர். இவரது மனைவி ரேஷ்மி(31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கொலை

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அகிலன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் ரேஷ்மி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நேற்று மதியம் சமாதானப்படுத்தி மீண்டும் ரேஷ்மியை கணவர் வீட்டில் அவரது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர். மாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக உவரி போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தர வின்பேரில் தலைமறைவான அகிலனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
    • அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.

    விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.
    • பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய காலை வழிபாட்டு நிகழ்வை 1-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பித்தனர். அவர்கள் உணவின் முக்கியத்துவம் குறித்தும் நமது உடலைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், திணை வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை எவ்வாறு நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தேசிய உணவு தினத்தை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்ளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

    1 முதல் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரட் பயன்படுத்தி வடிவங்கள் உருவாக்குதல். 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் பயன்படுத்தி சாலட் தயாரித்தல் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நெருப்பின்றி உணவு தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

    உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர். மேலும் அதனைப் பார்வையிட தகுந்தபடி முறையாக அழகுபடுத்தி வைத்திருந்தனர்.

    இவற்றை பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பார்வையிட்டு சிறப்பாக உணவு தயாரித்து விளக்கவுரை அளித்த மாணவர்களை தேர்ந்தெ டுத்து அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    • திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்க புரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்த மான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கள்ளிகுளம் சங்கர் (வயது 35), கீழ தேவநல்லூர் முருகன் (வயது 35) ஆகியோர் 2 ஆடுகளை கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த வேல் ஆடுகளை திருடி செல்வதை கண்டு கூச்ச லிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சங்கர், முருகனை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.
    • பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.

    பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II வருவாய் துறை சார்பில் ஒவ்வொரு வட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மானூர் வட்டாரத்தில் பாலாமடை ஊராட்சிக்குட் பட்ட கீழ பாலாமடை சமுதாய நலக்கூடத்தில் நடைபெறுகிறது.

    சேரன்மகாதேவி வட்டாரத் தில் திருவிருத் தான் புலி ஊராட்சிக் குட்பட்ட திருவிருத் தான்புலி சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி வட்டாரத்தில் இலங்குளம் ஊராட்சிக்குட் பட்ட பரப்பாடி, இலங்குளம் ஊராட்சி மன்ற அலுவல கத்திலும் நடைபெறுகிறது.

    திசையன்விளை வட்டாரத்தில் அழகப்பபுரம் கிராம சேவை மையம், விஜயநாராயணம் ராசையா தேவர் திருமண மண்டபம், ராதாபுரம் வட்டாரத்தில் தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற அலுவலகம், இருக்கன்துறை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஜாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை சேவைகளுக்கு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    எனவே இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு வருவாய் துறை மற்றும் இதர துறைகளின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
    • தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் வடிவம்மாள்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 42). தொழிலாளி.

    இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

    ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியாததால் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கடன்பிரச்சினை காரணமாக முருகனை அவரது மனைவி திரவுபதி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் வாழ்வில் வெறுப்படைந்த முருகன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×