search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN cabinet meeting"

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

    குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.

    மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

    • விசாரணை அறிக்கை வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
    • தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

    முதல்வர், சட்டத்துறை அமைச்சரிடம் அறிக்கை தரப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்திலும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 27-ந்தேதி கூடுகிறது.
    • முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு.

    சென்னை:

    பரபரப்பானஅரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி கூடுகிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்பிக்க உள்ள நிலையில், புதிய சட்ட மசோதா சீர்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

    மேலும் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் இப்போது மீண்டும் அமைச்சரவை கூட்டம் 27-ந்தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தில் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:
     
    சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் புதிய நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
     
    ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னையில் வரும் 18-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:

    சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், வரும் 18-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt

    ×