search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Transport strike"

    மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மோட்டார் வாகன சட்டத்தை கைவிட கோரியும், போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் வருகிற 7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் வசூலை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அரசு பஸ்கள், ஆட்டோ, டாக்ஸி, கால்டாக்ஸி, லாரி, வேன், சரக்கு வாகனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை பழைய பஸ்நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை. மதிவாணன், இந்து மஸ்தூர் சபா பொதுசெயலாளர் முருகேசன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் மோகன் ராஜ் உள்பட பலர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டலங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ×