என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC Exam"

    • குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில், குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
    • சென்னையில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது.

    தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடைபெற்றது.

    இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.

    பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் 126 மையங்களில், 35 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையில் மட்டும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

    • ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

    அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியது.

    நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • குரூப் 4 தேர்வு 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன.

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

    இந்நிலையில், நடந்து முடிந்த குருப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இந்த புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
    • கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதாவது, ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    சனாதானம் குறித்து பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

    இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.

    • நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
    • இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் கீழ் வரும் துறை சார்ந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? அவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும்? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆண்டு அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். வழக்கமாக இந்த ஆண்டு அட்டவணை, முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

    அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் (2025) 7 விதமான தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



    அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7-ந்தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21-ந்தேதியும் நடைபெறும் எனவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 4-ந்தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13-ந்தேதியும், எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 27-ந்தேதியும் நடைபெற உள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதியும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ந்தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7-ந்தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21-ந்தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

    • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினர்.
    • தேர்வாணையத்தின் கூட்டம் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற்றது.

    VAO பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7:247 மையங்களில் 15.8 லட்சம் தோவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்

    இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும்.
    • தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய தேர்வுகளின் முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்திலும் வெளியாகிறது.

    இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து அறிந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது.

    இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ள https://x.com/TNPSC-Office என்ற எக்ஸ் தளப்பக்கத்துக்கு சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

    • குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
    • தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, தேர்வு எழுதியவர்கள் www.tnpscresults.tn.gov, www.tnpscexams.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.
    • மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி கடந்த 14-ந்தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு நடந்தது. 15 மாவட்ட மையங்களில் 4,186 பேர் இத்தேர்வை எழுதினர்.

    இந்த நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாகப் பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.

    மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×