என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to 13 feet"

    • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்ற ப்பட்டது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப் பாளையம் அணையில் 7 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிக அளவு தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று முன் தினம் நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 675 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அப்போது அணையில் 11 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

    பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 553 கன அடி நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து அணையின் நீர்மட்டம் 13 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று பகலில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகு களில் வெளியேற்றப்பட்டது. 

    ×