என் மலர்
நீங்கள் தேடியது "to fish"
- ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
- ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அக்கரைப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
இதில், ரூ.56,950-க்கு அடிப்படை குத்தகை உரிமம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அதிக தொகையான ரூ.3,01,100-க்கு ஏலம் எடுத்து மீன் பிடிக்க குத்தகை உரிமத்தை பெற்றார்.