என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tombs"

    • மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
    • மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.

     மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

    விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

     

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

    இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

     

    முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில்  ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சீர்காழி சட்டநாதர் கோவில்.
    • இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக நம்புகிறார்கள்.
    • குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள கிராமம் கதீயா. இங்கு ஒரு மணல் குன்று ஆராய்ச்சியாளர்களின் கண்களில்பட்டது. இந்த மணல் குன்றினை தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி வியக்க செய்தது. மணல் குன்றின் உள்ளே பழங்கால குடியிருப்பு புதைந்து கிடப்பது போன்ற அடையாளங்கள் தென்பட்டன. இதை தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் தலைமையில் இந்திய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தில் 3 கட்டமாக அகழாய்வு செய்தனர். அப்போது அது 5,300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் என தெரியவந்தது. உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தைச் சேர்ந்த 500 கல்லறைகள் அதில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கல்லறைகளில் சுமார் 200 கல்லறைகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

    ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சமூகம், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுடு செங்கல் நகரங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது இது சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

    இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும், மண்டை ஓடு துண்டுகள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட எலும்பு க்கூட்டு எச்சங்களையும் மீட்டுள்ளனர்.மேலும் 100-க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள். பீங்கான் பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், சிறிய குடங்கள், குவளை, களிமண் பானைகள், தண்ணீர் கோப்பைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன, இதில் சில முட்டை வடிவமானவை. மற்றவை செவ்வக வடிவமானவை. குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

    எகிப்து மற்றும் மெசப டோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதிச் சடங்குகளைப் போலல்லாமல், இவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை இருந்தன. இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

    இங்கு, பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி, செவ்வக வடிவிலான மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கல்லறைக்குழி பெரும்பாலும் மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும், பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கான்சின் மடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் அறிஞரான ஜொனதன் மார்க் கெனோயர் கூறுகிறார். சிலர் வளையல்கள், மணிகள், அலங்காரப் பொருட்கள், செம்பால் செய்யப்பட்ட கண்ணாடியுடன் புதைக்கப்பட்டனர்.

    முதியவர்கள், அவர்கள் பயன்படுத்திய உணவைப் பரிமாறுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான பாத்திரங்களுடன் புதைக்கப்பட்டுள்ளனர்,

    ஆனாலும் இந்த கல்லறைத் தளத்தில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.

    இதன் ரகசியங்கள் என்ன? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபிஸ் லாசுலி என்னும் நீல நிற கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது, மக்கள் கற்களைக் கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் குறிக்கிறது. இங்கு கிடைத்த மனித உடல் எச்சங்களை வேதியியல் ஆய்வுகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்தால் இங்கு வாழ்ந்து இறந்த ஆரம்பகால மக்கள் பற்றி மேலும் அறிய உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    • சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
    • ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்

    400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.

    அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.

    அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.

    அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

     

    இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

    நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.

    இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

    ×