search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "took place"

    • ராமநாதபுரம்,சிவகங்கை-விருதுநகர் மாவட்டத்தில் 30 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    ராமநாதபுரம்

    2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வில்லை. அவர்களை சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ேதர்வு மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்லைக்கழ கம், வி.பி.எம். கல்லூரி, விருதுநகர் வித்யா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக், வி.வி.வி. பெண்கள் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, காரியாபட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, செவல்பட்டி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 மையங்களில் நடந்தது.

    காலை 9.30 மணி அளவில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த மையங்களில் 16 ஆயிரத்து 379 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்த பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, உமையாள்-ராமநாதன் மகளிர் கல்லூரி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்க ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மொத்தம் 8 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 30 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    ×