search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Top police officials also paid homage"

    • அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இவர் கடந்த 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் மாநகர காவல் துறையில் டெலிகாம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 56). இவர் உடல்நலக்குறைவால் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி அஞ்சலி செலுத்தினார்.மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இறந்த சீனிவாசனுக்கு ராதா (53) என்ற மனைவியும், நாகராஜன் (30) என்ற மகனும், பிரியா (30) என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×