என் மலர்
நீங்கள் தேடியது "tore"
- கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
- இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.