search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists at Chatanur Dam"

    • ரெயில் சேவை தொடங்க வலியுறுத்தல்
    • உற்சாகத்துடன் குளித்து நீச்சல் பயிற்சியும் பெற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான சாத்தனூர் அணையில் தீபாவளி பண்டிகையான நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

    நேற்று காலை முதலே குடும்பம், குடும்பமாக அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், 117 அடி நிரம்பிய அணையின் முழு தோற்றம் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர். குழந்தைகள் விளையாட்டு பூங்காக்களில் ஆர்வமுடன் விளையாடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியை அடைந்தனர்.

    சிறுவர்கள், பெரியவர்கள் என இருவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து நீச்சல் பயிற்சியும் பெற்றனர்.

    தமிழ்நாட்டிலேயே நன்னீர் முதலைகள் சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையில் தான் உள்ளது. காலையில் அணை பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மாலைவரை அணையில் பொழுதை கழித்து விட்டு மலையில் வீடு திரும்பினர்.

    மாலை நேரத்தில் அணையில் பொருத்தப்பட்டிருந்த வண்ண வண்ண விளக்குகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தனூர் அணைப்பகுதியின் அழகை ெரயில்களில் சென்று ரசித்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வந்த ெரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

    இந்த ெரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

    ×