என் மலர்
நீங்கள் தேடியது "Town Mount Road"
- இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது.
- இந்த சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன.
நெல்லை:
நெல்லை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த சாக்கடை நீர் ஓடைகள் மற்றும் வாறுகால்கள் சுத்தம் செய்யும் பணி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணி
அதன் தொடர்ச்சியாக இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன. இந்த பகுதியில் சாக்கடை வாறுகால்கள் தூர்ந்து போய் கிடந்த நிலையில் தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் கொண்டு சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.