என் மலர்
நீங்கள் தேடியது "Town road"
- நெல்லை டவுண் தெற்கு ரதவீதி சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாலையானது எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலையாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது.
நெல்லை:
நெல்லை டவுண் தெற்கு ரதவீதி சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாலையானது எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலையாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. பொதுமக்களுக்கு பயன்படாமல் சாலையில் வீணாக குடிநீர் செல்வதை மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை எடுத்து அதனை சீர்செய்ய வேண்டும். பொது மக்களுக்கு பயன்படாமல் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு சென்று கொண்டிருக்கிறது.
எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்திட ஆவன செய்திட வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு, நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தலைவர் அய்யூப் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.