என் மலர்
நீங்கள் தேடியது "Town"
- மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் வீட்டில் வைத்து சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைதான 2 பேரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
நெல்லை:
நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் வீட்டில் வைத்து சிலர் கஞ்சா விற்பதாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
உடனடியாக அவரது தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் (வயது 30) மற்றும் சுடலை என்ற சிவா (25 )ஆகிய 2 பேரும் சேர்ந்து வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.