search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor wheel"

    • மாரி நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது.
    • டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கரும்புடிராக்டர்மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(70) விவசாயி.இவர் நேற்று இரவு ஒரத்தூர் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்மீது டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் பலியான மாரி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

    • வரதராஜன் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார்.
    • வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சி மயிலூர் கிராம த்தை சேர்ந்தவர் வரதராஜன்,(வயது 41.) இவர் நேற்று தனது வயலில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், மாலை வயலில் உழவு ஓட்டி க்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் பகுதி தூக்கிக்கொண்டு தலை கீழாக கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றது.
    • செல்லும்போதே டிராக்டர்சக்கரம் கழன்று ஓடியது.

    கடலூர்:

    விழுப்புரம்மாவட்டம்திருவெண்ணைநல்லூர்பகுதியில் இருந்து, நேற்று மாலை, நெல்லிக்குப்பம் ஆலைக்கு, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றுகொண்டு இருந்தது டிராக்டரைசுரேஷ் ஓட்டிவந்தார். பண்ருட்டிலிங்க் ரோடு செவன்த் டே பள்ளி முன்பு செல்லும்போது டிராக்டர்சக்கரம்கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் டிராக்டர் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்த படி நின்றது. அப்போது அந்த வழியாகவந்தபயணிகள் அலறியடித்து ஓடினர்.

    கழன்ற சக்கரம் சிறிது தூரம் ஓடி விழுந்தது. இதனால்அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. டிராக்டரை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. அப்போது நடுரோட்டில் டிராக்டர் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் பாலாஜி சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்றுவாகனங்களை மாற்று வழியாக திருப்பி விடப்பட்டனர்.பின்பு ஜெசிபி இயந்திரத்தை வரவழைத்து டிராக்டரை அப்புறப்படுத்தினர்.

    மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழந்தது. பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சென்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 33) கிரேன்ஆபரேட்டர். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 5 வயதில் சாகித்யா என்ற பெண் குழந்தை இருந்தது.

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் டிராக்டர் மூலம் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவர கன்னியப்பன் ஏற்பாடு செய்தார். அதனைத்தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(32) என்பவர் இன்று காலை டிராக்டர் டேங்க் மூலம் கன்னியப்பன் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்தார். வீட்டின் முன்பு டிராக்டர் வந்து நின்றது. பின்பு டிரைவர் ஏகாம்பரம் டிராக்டரை பின்னால் எடுத்தார்.

    அப்போது அங்கு சாகித்யா விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் மீது எதிர்பாராதவிதமாக டிராக்டர் சக்கரம் ஏறியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சாகித்யாவை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதை கேட்டதும் கன்னியப்பன் அவரது மனைவி இலக்கியா ஆகியோர் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் ஏகாம்பரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×